2.0 - இது சாதா குப்பை அல்ல.. பெருங்குப்பை (பேரன்பு, பெருங்காதல் போல )
கதையே ஒரு லைன் தான்.. சயன்ஸ் பிக்சன். நல்ல வேளை சுஜாதா ஏற்கனவே செத்துட்டார். அவர் எழுதுற கதையை சங்கர் எழுதினால் எப்படியிருக்கும்? அறிவியலும் இல்லை அறிவும் இல்லை. சயன்ஸ் பிக்ஸன் படத்துல ஜெயமோகனுக்கு என்ன வேலைன்னு தெரியலை. இதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த படம் சங்கரின் புத்தியை குறுக்குவெட்டு தோற்றத்தில் காட்டுகிறது.
ஒரு மனிதன் சாகவேண்டும் என்று விரும்பலாம். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது என்று கூட திட்டலாம். ஆனால் மனிதர்களை எப்படி கொலைசெய்யலாம் என்பதன் உச்சகட்ட வக்கிரம் அந்நியன் என்று நான் நினைத்தது தவறு. 2.0 மனவக்கிரத்தின் புதிய உச்சம்.
பறவை காதலர் ஒருத்தர் செல்போன் டவரால சிட்டுக்குருவி எல்லாம் சாவுதுன்னு பீல் பண்ணி தற்கொலை பண்ணிக்குறார். செல்போன் பயன்படுத்துற, அத புரவைட பண்ணுற கம்பெனி, மந்திரி, அரசாங்கம்னு (எங்கியோ கேட்ட மாதிரி இல்லே?.. அதே தான்..) பாட்டம் அப் முறைல எல்லாரையும் ஆவியா வந்து செல்போனை வச்சே பழிவாங்குறார்.. (நம்மையும் சேர்த்து தான்.. )
பாசிட்டிவ் எனர்ஜி நெகட்டிவ் எனர்ஜியை எதுக்குதாம்... அடேய்.. ஈர்க்கும்டா.. ஆறாங்கிளாஸ் ஒழுங்கா படிங்கடான்னு சொன்னா கேட்டா தானே.. அப்புறம் பத்து நிமிஷத்துல பாசிட்டிவ் நெகட்டிவை ஈர்த்து நியூட்ரல் ஆகும்னு விளக்கம் குடுக்குறான். ஏதா ஒரு முடிவா சொல்லுங்கடா.. இது கூட பரவால்லை.. கொஞ்சமாச்சும் கற்பனை வளத்தோட எடுக்க வேணாமா? காசு புரடியூசர் குடுக்குறான். அடிச்சி விளாச வேண்டியது தானே.. படத்துலே உருப்படியான ஒரே விஷயம் கிராபிக்ஸ். அதிலும் எந்த பறவை எங்க வாழும்னு தெரியாம அந்தாளு பறவை கலக்ஷன்ல ஹான்பில் எல்லாம் இருக்குற மாரி காட்டுறான்.
எமி ஜேக்சன் ரோபோவாம்.. அது முதல் காட்சில நல்ல டிரஸ் போட்டுட்டு வருது. அடுத்தடுத்த காட்சிகள்ல சங்கருக்கு என்னவெல்லாம் புடிக்குமோ அதையெல்லாம் லென்ஸ் வச்சி காமிச்சிருக்கார். ரெண்டு மூணு பிட்டு கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா இருக்கு.. கொஞ்ச நேரத்துல அதுவும் பழகிருது.
செல்போனால சிட்டுக்குருவி சாவுதுன்னா, இந்தியாவுலயே அதிகமா செல்போன் இருக்குற பாம்பேல ஏன் அவ்வளவு சிட்டுக்குருவி வாழ்து? புரடியூசர் காசு இத்தனைய தின்னுறோமே , மருந்துக்காச்சும் ரிசர்ச் பண்ண வேணாமா? டவர் நட்ட ஒடனே குருவியல்லாம் செத்து விழுதாம்.. அதுக்கு மனுஷங்கள விட அறிவு ஜாஸ்தி சங்கர் சார்.. அது வேற இடத்துக்கு பறந்து போயிரும்.
2ஜி வழக்கு முடிஞ்சி, கும்பலா கேஸ் போட்டவனுக பூராம் ஓடி போனப்புறம் வந்து கேக்குறார். (திருப்பியும் மொதல்லேருந்து..) எல்லாமே சட்டப்படி தான் பண்ணிருக்குன்னு புரூவ் பண்ணாலும் ஒத்துக்கமாட்டாராம்.. அப்புறம், ராஜா சொன்ன பாயிண்டை 'லாஜிக்கா' ஒடைக்குறாராம்: வெளிநாடுகள்ல நிறைய புரவைடர்ஸ் இல்லே, அதுனால அங்கல்லாம் குறைவா டவர் இருக்கு. நம்ம ஊர்ல 10க்கும் மேல புரவைடர் இருக்குறதால தான் இத்தினி டவர் இருக்காம். ஆளுக்கு ஒரு கரண்டி குடுக்க அது என்ன சுண்டலா? (காம்பெடிஷன் அதிகமானதால் விலை குறைந்தது, அதனால சாதாரண மக்களும் பயன்படுத்துற அளவுக்கு கொண்டு வந்தது நான் தான்னு ராஜா சொன்னது நினைவிருக்கா?) என்னதான் சட்டப்படி நிரூபணம் பண்ணாலும் "நான் சொன்னா நீ குற்றவாளிதான்"னு சொல்லுற வியாதி நிச்சயமா நம்ம உயர்தர சைவ பண்பாட்டிலிருந்து வந்தது தான். பறவைகள் எல்லாம் செத்து போச்சாம், அதனால ஹிரோஷிமாவை விட அதிகளவில் செல்போன் பயன்படுத்தும் மனிதர்களை கொன்று குவிக்கலாமாம். பறவை உயிர் உன் உயிரை விட பெரியது. இந்த ஜீவகாருண்யத்தை வேற எங்கியோ கேட்ட மாதிரி இல்லே?
சிட்டுக்குருவிக்கு சமாதிகட்டி ஒப்பாரி வைக்குறத தவிர அக்ஷய்குமாருக்கு வேலையே இல்லை. முதலில் இருந்து கடைசி வரை அந்த பறவை வாய திறந்து கொட்டாவி விடுறதை பாத்தே போரடிக்குது. அந்த எழவு தான்னா ஷேப்பயாச்சும் மாத்தி காட்டிருக்கலாம். இவ்ளோ டெக்னாலஜியும் பவரும் இருக்குற வில்லனும் ஹீரோவும் கடைசில கட்டயால அடிச்சி தான் சண்டை போட்டுக்குறாங்க.. நாமெல்லாம் தீவிரவாதி ஆகிறதை தவிர வேற வழி இல்லை போல இருக்கு.
அப்படி செலவு பண்ணி பாக்குறதுன்னா 3D பாருங்க. கிராபிக்ஸ் நல்லாருக்கு. பறவைகள் வரும் இடம்லாம் உசிரோடவே நம்ம முன்னால பறக்கிற எபக்ட் தருது... ஆனா முழு படத்தயும் 3D ல எடுக்குறவன் காட்சிகளை அதுக்கு தகுந்த மாறி எடுக்கணும். பறவைகளை அப்படி காட்டுறது ஓகே, ஆனா கான்பரன்ஸ் டேபிள்ல உக்காந்துருக்குறதை 2D மாதிரி டேபிள் மேல வண்டி ஒட்டி காமிச்சா - அவங்களோட கான்பரன்ஸ் டேபிள் மேல மல்லாக்க படுத்துருக்குற எபக்டு தான் வருது. அதேபோல பல இடங்கள்ல 3D கண்ண குத்திரும் போல இருக்கு.
பறவை பறவைன்னு படம் பூரா மாருல அடிச்சுக்குறார் சங்கர்.. ஆனா அந்த ரோபோ பறவையை எப்படி அசிங்கமா இமிடேட் பண்ணுது? அதை எப்படி ட்ரீட் பண்ணுது.. நாம ஊருல குத்துவிளக்கு கொலவிளக்குன்னு கும்பிட்டுட்டு வீட்டுக்குள்ள விட்டு அடிப்பமே.. அதே போலத்தான் பறவைகளை டீல் பண்ணிருக்கு இந்தப்படம். அங்கங்க அந்நியன் மாதிரி இருக்கு.. இதுக்கு இவ்ளோ டெக்கனிகல் வேலை தேவையே இல்லை.. என்னதான் பொட்டலம் ஹைகிளாஸா போட்டாலும் திங்கிறதென்னவோ உள்ளருக்க பிரியாணியைத்தான்.. பொட்டலம் போட கோர்ஸ் எடுக்குறதுக்கு முன்னால பிரியாணி செய்ய பழகனும். நம்மாளு தான் அழகாக்குறேன் பேர்வழின்னு ரோட்டுக்கு பெயிண்டடிக்குற ஆளுல்ல.. கற்பனை வற்றினா தயவுசெஞ்சி வேற ஏதாச்சும் பண்ணுங்க.. குறைந்தபட்சம் காட்டுற பக்கமெல்லாம் சொறிஞ்சி விடுற குரூப்புல இருந்து வெளில வாங்க. இப்படி படமெடுத்து தாலியறுக்காதீங்க.
No comments:
Post a Comment