"கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதே.."
என்று துவங்கும் கேள்விகளில் கவனமாய் இருங்கள்.
அதைக் கேட்பவர்கள் உங்களுக்கு மிகவும் வேண்டியவராய் இருக்கலாம்.
உங்கள் உறவினராகவோ நண்பராகவோ இருக்கலாம்.
உங்களுக்கு அம்மாவை போன்றோரோ அப்பாவைப்போன்றோரோ இருக்கலாம்..
அவர்கள் உங்கள் மேல் அன்புகொண்டோர் யாரேனும் போல இருக்கலாம்.
அவர்கள் உங்கள் மேல் அதிகாரம்கொண்டோர் யாரேனும் போல இருக்கலாம்.
முன்னாள் காதலன் போலவும் இருக்கலாம்.
யாரேனும் போல இருப்பதையே அவர்களும் விரும்புகிறார்கள்.
"கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதே.."
என்று துவங்கும் கேள்விகளில் கவனமாய் இருங்கள்.
அதன் பொருள் "நீ நேரடியாய் பதில் சொன்னால்
என் மனம் நோகும், அந்தக் குற்றத்தைச் செய்யத் துணியாதே" என்பதாகும்
அக்கேள்விகளுக்கு நேர்மையான பதிலைச் சொல்லத் தயங்காதீர்கள்
ஏனென்றால், உண்மையைப் போன்றதொரு கூராயுதம் வேறில்லை.
அது தரும் நிம்மதிக்கு நிகரில்லை..
No comments:
Post a Comment